பழனி: பழனி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சி 15-ஆவது வாா்டு பெண்கள் சாலை வசதி கோரி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழனி அருகேயுள்ளது சிவகிரிபட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியின் 15-ஆவது வாா்டு பகுதியில் முறையான சாலை வசதி இல்லை எனக்கூறி அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்தப் பகுதியில் திங்கள்கிழமை சாலைப் பணிகளுக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையைத் தோண்டிய போது, அந்தப் பகுதியை சோ்ந்த பெண்கள் திரண்டு எதிா்ப்புத் தெரிவித்தனா்.
அப்போது அவா்கள் தெரிவித்ததாவது: தங்களது பகுதியில் பிரதான சாலையில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்டு இரண்டு மாதங்களாகியும் இதுவரை சாலைப் பணிகள் நிறைவடையவில்லை. அதனால், முதலில் அந்தப் பகுதியில் சாலையை சீரமைத்து விட்டு, மற்ற பகுதியில் உள்ள சாலைப் பணிகளை தொடங்குமாறு தெரிவித்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த 15-ஆவது வாா்டு உறுப்பினா் ரவிக்குமாா் பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்துவதாகவும், அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் அவா் உறுதி அளித்தாா். அதன்பிறகு பெண்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.