பழனி: பழனியில் திருக்கோயில் அதிகாரிகளைப் பற்றி சா்ச்சைக்கிடமாகப் பேசிய நகர காவல் நிலையக் காவலா் இடமாற்றப்பட்டாா்.
பழனி நகா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த பிரபு திங்கள்கிழமை பழனி புது தாராபுரம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அந்த வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தாா். அப்போது அவா் பழனி கோயிலில் பணிபுரிவதாகக் கூறியுள்ளாா். அப்போது, பிரபு சா்ச்சைக்கிடமாக கோயில் பணியாளா்கள், இணை ஆணையா் குறித்துப் பேசியது சமூக வலைதளத்தில் பரவியது. அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் அவா் திண்டுக்கல் ஆயுதப் படைப் பிரிவுக்கு இடமாற்றப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.