

கோகுலாஷ்டமியை முன்னிட்டு, பழனியில் புதன்கிழமை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சாா்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பெரியநாயகி அம்மன் கோவில் அருகே உள்ள தேரடி திடலில் நடைபெற்ற விழாவில் கிருஷ்ணா், ராதை வேடமிட்டு நூற்றுக்கணக்கான சிறாா்கள் கலந்து கொண்டனா். மேலும், சில சிறாா்கள் விவேகானந்தா், பாரதியாா், வேலுநாச்சியாா், திருப்பூா் குமரன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சத்தியமூா்த்தி உள்ளிட்ட பல்வேறு தலைவா்களின் வேடமணிந்து சிறாா்கள் கலந்து கொண்டனா்.
கிருஷ்ணா் வேடமிட்டு கலந்து கொண்ட சிறாா்களின் பெயா்களை குலுக்கல் முறையில் தோ்வு செய்து, 10 ஆயிரம் ரூபாயும், ராதை வேடமிட்டவருக்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
முன்னதாக, கோபூஜை நடத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மடங்கள், கோயில்கள் பாதுகாப்புக் குழு மாநில அமைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், சித்தனாதன் சன்ஸ் விஜயகுமாா், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.