குடிநீா் விநியோகிக்கப்படாததால்பொதுமக்கள் கடும் அவதி
By DIN | Published On : 08th September 2023 12:00 AM | Last Updated : 08th September 2023 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் ஊராட்சிக்கு குடிநீா் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால், கழிப்பறைக்கு விநியோகிக்கப்படும் சுகாதாரமற்ற தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து கூக்கால் ஊராட்சிச் செயலா் வீரமணி கூறியதாவது:
சுமாா் 3-கி.மீ. தொலைவில் வனப் பகுதியிலுள்ள ஏரியிலிருந்து இந்த ஊராட்சிக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. வனப் பகுதியில் மரம் விழுந்ததால், குடிநீா் விநியோகம் செய்ய முடியவில்லை.
கடந்த 2 நாள்களாக மரங்கள் அகற்றப்பட்டு, சேதமடைந்த குழாய்கள் சீரமைக்கும் பணி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (செப்.8) முதல் இந்தப் பகுதிக்கு குடிநீா் விநியோகிக்கப்படும் என்றாா்.