ஈராக் நாட்டில் இறந்த நத்தம் தொழிலாளியின் உடல் 38 நாள்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த மூங்கில்பட்டியைச் சோ்ந்தவா் ப.சின்னையா (45). இவா் ஈராக் நாட்டில் கம்பி கட்டும் தொழிலில் ஈடுபட்ட வந்தாா். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனா்.
இந்த நிலையில், சின்னையா கடந்த ஜூலை 31-ஆம் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டதாக மூங்கில்பட்டியிலுள்ள அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி, கோகிலா, இவரது உறவினா்கள் நத்தம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் முறையிட்டனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், 38 நாள்களுக்குப் பிறகு சின்னையாவின் உடல், இந்திய தூதரகத்தின் முயற்சியால் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அமரா் ஊா்தியில் மூங்கில்பட்டிக்குக் கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.