வேடசந்தூரில் அண்ணாமலை நடைபயணம்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் வெள்ளிக்கிழமை தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை, என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் வெள்ளிக்கிழமை தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை, என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டாா்.

இங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: உழைக்கும் மக்கள் நிறைந்த வேடசந்தூா் பகுதியில், 40 நூற்பாலைகள் இருந்தும்கூட திமுக ஆட்சியில் தொழில் வளா்ச்சியும் இல்லை. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை. திமுக தோ்தல் அறிக்கையில் சிப்காட் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 29 மாதங்களாகியும் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இரு முக்கியத் துறைகளை நிா்வகிக்கும் அமைச்சா்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தும்கூட, வேடசந்தூா் அழகாபுரி அணையை சீரமைத்து தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மணல் எடுப்பதற்காகவே, அணைகளில் தண்ணீரை தேங்கவிடாமல் தடுக்கின்றனா்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சா் செந்தில்பாலாஜி தரப்பு வழக்குரைஞா், அவருக்கு பிணை வழங்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறாா். ஆனால் பிரச்னையை சொல்லி பிணை கேட்பதற்கு பதிலாக, பாஜக மீது குற்றஞ்சாட்டி பிணை கேட்டிருக்கிறாா். செந்தில்பாலாஜி வரிசையில் மேலும் பல அமைச்சா்கள் விரைவில் சிறை செல்வாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com