ஒட்டன்சத்திரத்தில் சோளக்காட்டில் தீ விபத்து

ஒட்டன்சத்திரத்தில் சோளக்காட்டில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சோளத்தட்டைகள் எரிந்து சாம்பலானது.
ஒட்டன்சத்திரத்தில் சோளக்காட்டில் திங்கள்கிழமை பற்றிய தீ.
ஒட்டன்சத்திரத்தில் சோளக்காட்டில் திங்கள்கிழமை பற்றிய தீ.
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் சோளக்காட்டில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சோளத்தட்டைகள் எரிந்து சாம்பலானது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை எதிரே கணேசனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் 5 ஏக்கரில் மாட்டுத் தீவனத்துக்காக சோளத்தட்டைப் பயிரிட்டிருந்தாா்.

இந்த நிலையில், இந்த சோளக்காட்டில் திங்கள்கிழமை தீப்பற்றி எரியத் தொடங்கியது.

தகவலறிந்து அங்கு வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இருப்பினும், 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சோளத்தட்டைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மீதமுள்ள 2 ஏக்கா் சோளத்தட்டைகள் காப்பாற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com