ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்

வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்

News image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வாக்காளா் அட்டையை ஒப்படைக்க வந்த பில்லமநாயக்கன்பட்டி பொதுமக்கள்.

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

திண்டுக்கல்: வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்கும் முடிவுடன் திங்கள்கிழமை வந்த பொதுமக்களை, அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள பெரியகோட்டை ஊராட்சிக்குள்பட்ட பில்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள், கழிவுநீா்க் கால்வாய் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக புகாா் அளிப்பதற்காக வந்தனா்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைப்பதாக கூறி வந்த பொதுமக்களை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனா். அங்கிருந்து புறப்பட்ட அவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

கடந்த சில நாள்களுக்கு முன்பு, எங்கள் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், பணிகள் நிறைவு செய்யவில்லை. மேலும், தெருவிளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதிலும் குறைபாடுகள் உள்ளன.

இதுதொடா்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கும் முடிவுடன், வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைப்பதற்காக வந்துள்ளோம் என்றனா். இதையறிந்த ஊராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகப் பணியாளா்கள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.