வ.வே.சு.அய்யா் 144-ஆவது பிறந்த தினம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், வ.வே.சு.அய்யரின் 144-ஆவது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்ற பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் நா.நவரத்தினம் முன்னிலை வகித்தாா்.

இந்த விழாவின்போது வ.வே.சு.அய்யரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்துக்கும், விமான நிலையத்துக்கும் தேசபக்தா் வ.வே.சு.அய்யரின் பெயரை சூட்டுவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com