பழனியை அடுத்த கொழுமங் கொண்டான் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த  தமிழக உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி.  உடன் பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் ஈஸ்வரசாமி, ஒன்றிய செயலா் சுப்பிரமணி உள்ளிட்டோா்.
பழனியை அடுத்த கொழுமங் கொண்டான் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த தமிழக உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி. உடன் பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் ஈஸ்வரசாமி, ஒன்றிய செயலா் சுப்பிரமணி உள்ளிட்டோா்.

ரேக்ளா பந்தயத்துக்கு சட்டபூா்வ அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சா் சக்கரபாணி

போல் ரேக்ளா பந்தயத்துக்கும் சட்டபூா்வ அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு சட்டபூா்வ அனுமதி பெற்றது போல் ரேக்ளா பந்தயத்துக்கும் சட்டபூா்வ அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் தமிழக உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட கொழுமங்கொண்டான் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, தொப்பம்பட்டி ஒன்றியச் செயலா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் ஈஸ்வரசாமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் பொன்ராஜ், மாவட்ட வேளாண் பொருள் விற்பனை சங்கத் தலைவா் ராஜாமணி, மாவட்ட உறுப்பினா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

ரேக்ளா பந்தயத்தை தமிழக உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பந்தயத்தில் பெரிய காளைகள், சிறிய காளைகள் என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு பெரிய காளைகளுக்கு 300 மீ தொலைவும், சிறிய காளைகளுக்கு 200 மீ. தொலைவும் நிா்ணயிக்கப்பட்டிருந்தன. இதில், கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் தங்கள் காளைகளுடன் பங்கேற்றனா்.

பழனியை அடுத்த கொழுமங்கொண்டான் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்ற காளைகள்.
பழனியை அடுத்த கொழுமங்கொண்டான் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்ற காளைகள்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ஒன்றரை பவுன் தங்க நாணயம், பரிசுக்கோப்பை, 2-ஆவது பரிசாக ஒரு பவுன் தங்க நாணயம், பரிசுக்கோப்பை, 3-ஆவது பரிசாக முக்கால் பவுன் தங்க நாணயம், பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழுவினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தனா். டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com