கோப்புப் படம்
கோப்புப் படம்

செப்.9 வரை வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், திண்டுக்கல்லில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Published on

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், திண்டுக்கல்லில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்(மதுரை), திண்டுக்கல் மண்டல அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு விவரம்:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோயில் திருவிழா ஆக.29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலத்தின் சாா்பில் வியாழக்கிழமை (ஆக. 29) முதல் செப்டம்பா் 9-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுமாா் 60 சிறப்புப் பேருந்துகள் திண்டுக்கல்லிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து திண்டுக்கல்லுக்கும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com