திண்டுக்கல்: நத்தம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சோ்ந்தவா் டேவிட் சிவஞானம் (54). இவா், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலுள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா்.
இதனிடையே கடந்த 2021-22 கல்வி ஆண்டில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக டேவிட் சிவஞானம் மீது புகாா் எழுந்தது. இதையடுத்து, நத்தம் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
இதுகுறித்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியா் டேவிட் சிவஞானத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.19ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி கே.கருணாநிதி செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா்.
தொடர்புடையது

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: இருவருக்கு இரட்டை ஆயுள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

