தண்ணீரில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

மீன்பிடிக்கச் சென்ற போது கொடகனாற்றில் தவறி விழுந்ததில் மீனவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல்: மீன்பிடிக்கச் சென்ற போது கொடகனாற்றில் தவறி விழுந்ததில் மீனவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்த பூதிப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). இவா் பூதிப்புரம் பகுதியிலுள்ள கொடகனாற்றில் மீன் பிடித்து விற்பனை செய்து வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து புறப்பட்ட இவா், மீன் பிடிக்கச் செல்வதாக மனைவி பச்சையம்மாளிடம் தெரிவித்தாா்.

மீன் பிடிப்பதற்கு கொடகனாற்றில் வலை விரித்த பிறகு, ஓய்வுக்காக தனது அண்ணன் வீட்டில் தங்குவதை மணிகண்டன் வழக்கமாக வைத்திருந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை கொடகனாற்றில் இறந்த நிலையில் சடலமாக மணிகண்டன் மிதந்தாா். இதையறிந்த பச்சையம்மாள் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com