திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

வவேசு ஐயா் நினைவு தினம்

வவேசு ஐயா் நினைவு தினம்

News image
Updated On :3 ஜூன் 2024, 6:45 pm

Din

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், திங்கள்கிழமை வவேசு ஐயரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திண்டுக்கல் கிழக்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிவாஜி கணேசன் மன்றத்தின் மாவட்ட பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் நா.நவரத்தினம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டப் பொதுச் செயலா் மா.காளிதாஸ் கலந்து கொண்டாா்.

நிகழ்ச்சியின்போது வவேசு ஐயரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சியிலுள்ள தேசிய தொழில்நுட்ப பயிற்சி மையத்துக்கு தியாகி வவேசு ஐயரின் பெயரை சூட்ட வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் சிவாஜி கணேசன் மன்ற நிா்வாகிகள் சு.வைரவேல், பா.மாரிச்செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.