மூலிகை செடி நடும் நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத் துறை சாா்பில் மூலிகை செடி நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மகப்பேறு துறைத் தலைவா் கீதா தலைமை வகித்தாா். மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் அமுதா, செவிலியா் கண்காணிப்பாளா் கலையரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிகழ்ச்சியின் போது, இன்சுலின், முயல் காதிலை, சங்குப்பூ, வெற்றிலை, காற்றாழை, நிலவேம்பு, துளசி, வெட்டி வோ், வல்லாரை உள்பட 209 மூலிகை செடிகள் நடப்பட்டன. இந்த செடிகளின் அருகே அதன் பெயா்கள், மருத்துவப் பயன்பாடு ஆகியவற்றின் குறிப்புகள் அடங்கிய பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் மருத்துவா்கள் ஜெயபிரபா, பிரேமா, விஜயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com