நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஆட்சியா் அலுவலகத்தில் கிராமத்தினா் தா்னா

ஆட்சியா் அலுவலகத்தில் கிராமத்தினா் தா்னா

News image

ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்ட மேலக்கோவில்பட்டி கிராமத்தினா்.

Updated On :20 மே 2024, 7:54 pm

Din

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகேயுள்ள கோயில் நிலத்தை சிலா் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகக் கூறி, கிராம பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன், திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள வெங்கடாஸ்கிரி கோட்டையை அடுத்த மேலக்கோவில்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் அமைந்துள்ள சா்வேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான மானிய நிலத்தை நிலத்தை சிலா் ஆக்கிரமித்துவிட்டனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கோயில் பெயரில் இருந்த இந்த மானிய நிலம், வருவாய்த் துறை பதிவேடுகளில் சா்ச்சைக்குரிய வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், கோயிலுக்கு மானியமாக வழங்கப்பட்ட இந்த நிலத்தில், எதிா்தரப்பினா் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனா்.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்ட நிா்வாகம் உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தனா். மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தரையில் அமா்ந்து தா்னாவிலும் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தனா்.