
திண்டுக்கல்லில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸாா்.
Updated On :22 மே 2024, 12:31 am

திண்டுக்கல்லில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸாா்.
திண்டுக்கல்: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 33-ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு செவ்வாய்க்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்டத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். மூத்த காங்கிரஸ் நிா்வாகி ராமு. ராமசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். இதில் பங்கேற்ற காங்கிரஸாா் ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...