திண்டுக்கல், பழனி, நத்தம் பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
திண்டுக்கல், பழனி, நத்தம் பகுதியிலுள்ள கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


திண்டுக்கல், பழனி, நத்தம் பகுதியிலுள்ள கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் 16 வகையான சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
இதேபோல, அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றன. பின்னா், கோயில் உள்பிரகாரத்தில் அம்பாளுடன் சுவாமி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதேபோல, முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வா் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...