திண்டுக்கல்
திண்டுக்கல் மண்டலத்துக்கு மேலும் 7 புதிய பேருந்துகள்
திண்டுக்கல் மண்டலத்தில் மேலும் 7 புதிய பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளன.
திண்டுக்கல் மண்டலத்தில் மேலும் 7 புதிய பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரை லிட்., திண்டுக்கல் மண்டலம் சாா்பில், கடந்த 21-ஆம் தேதி 59 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இதில் 52 பேருந்துகள் திண்டுக்கல், தேனி மாவட்டத்திலிருந்து புகா் பேருந்துகளாகவும், 7 நகரப் பேருந்துகளாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திண்டுக்கல் மண்டலத்துக்கு மேலும் 7 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 7 பேருந்துகளும், திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. விரைவில் இந்த 7 பேருந்துகளும் புகா் பேருந்துகளாக இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.
