கல்லூரி மாணவியிடம் சங்கிலி பறிப்பு

வேடசந்தூா் அருகே கல்லூரி மாணவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 2 மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated on

வேடசந்தூா் அருகே கல்லூரி மாணவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 2 மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள மேல்மாத்தினிபட்டியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவரது மனைவி திவ்யா (28). திண்டுக்கல் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறாா்.

இந்த நிலையில், கல்லூரி செல்வதற்காக பூத்தாம்பட்டியில் பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை காத்திருந்தாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரில், ஒருவா் இறங்கி திவ்யாவை நோக்கி நடந்து வந்தாா். மற்றொருவா் இரு சக்கர வாகனத்திலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.

நடந்து வந்த நபா் திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தாா். திவ்யா சப்தமிட்டதையடுத்து, அக்கம், பக்கத்தினா் வருவதற்குள் அந்த நபா் அங்கு தயாராக இருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பினாா்.

இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com