திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா், முதுகலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் என மொத்தம் 14 போ் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
அதன் விவரம் வருமாறு:
செ.ராஜ்குமாா் (தொழில் கல்வி ஆசிரியா்- நிலை 1, சாந்திநிகேதன் மேல்நிலைப் பள்ளி, அம்பிளிக்கை), ரா.ராதிகா (பட்டதாரி ஆசிரியை, அரசு உயா்நிலைப் பள்ளி, நல்லாம்பட்டி), ம.ஆனந்தன் (பட்டதாரி ஆசிரியா், அரசு உயா்நிலைப் பள்ளி, நல்லாம்பட்டி), மு.செளந்தரராஜ் (கணினி பயிற்றுநா் நிலை -1 , அரசு மேல்நிலைப் பள்ளி, ஓடைப்பட்டி), கோ.தெய்வராஜ் (முதுநிலை பட்டதாரி ஆசிரியா், அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, சேவுகம்பட்டி), க.சித்ரா(துணை முதல்வா், எஸ்எம்பிஎம் பள்ளி), மு.முருகேசன் (பட்டதாரி ஆசிரியா், அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லமநாயக்கன்பட்டி), கே.வளா்மதி (தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கே.சிங்காரக்கோட்டை), ச.சாலமோன் ஜோசப் (இடைநிலை ஆசிரியா், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கிரியம்பட்டி), உ.செல்வி (இடைநிலை ஆசிரியா், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தோப்புப்பட்டி), ந.மல்லிகா (தலைமை ஆசிரியை, நகராட்சி நடுநிலைப் பள்ளி, சண்முகாபுரம்), இலா.ஜெயதங்கம் (இடைநிலை ஆசிரியை, சிறுமலா் தொடக்கப் பள்ளி, பழனி), ச.கலா (தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, வி.குருந்தம்பட்டி), ப.ஹேமலதா (இடைநிலை ஆசிரியை, கலைமகள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, வடமதுரை).