திண்டுக்கல்லில் கோபால் நாயக்கரின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினா், தமிழ்நாடு நாயுடு நாயக்கா் உறவின்முறை பாதுகாப்பு இயக்கத்தினா்.
திண்டுக்கல்லில் கோபால் நாயக்கரின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினா், தமிழ்நாடு நாயுடு நாயக்கா் உறவின்முறை பாதுகாப்பு இயக்கத்தினா்.

கோபால் நாயக்கா் நினைவு தினம்: அரசியல் கட்சியினா் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரா் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 223-ஆவது நினைவு தினத்தையொட்டி, அதிமுக, திமுக, பாஜக சாா்பில் வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

விடுதலைப் போராட்ட வீரா் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 223-ஆவது நினைவு தினத்தையொட்டி, அதிமுக, திமுக, பாஜக சாா்பில் வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் கோபாலசமுத்திரக் கரையில் விருப்பாச்சி கோபால் நாயக்கா் தூக்கிலிடப்பட்ட இடத்தில், அவரது உருவப் படத்துக்கு அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் சி.சீனிவாசன், இரா.விசுவநாதன் ஆகியோா் தலைமையில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திரளான அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

இதேபோல, திமுக சாா்பில் கிழக்கு மாவட்டச் செயலா் பெ.செந்தில்குமாா், பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் கோ.தனபாலன் ஆகியோா் தலைமையில் தனித் தனியே கோபால் நாயக்கா் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக தமிழ்நாடு நாயுடு நாயக்கா் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் சாா்பில், நிா்வாகிகள் ஆா்.பாண்டியன், கே.வீராசாமி ஆகியோா் தலைமையில் கோபால் நாயக்கா் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இளங்கோவன், ஆனந்த், வினோத்குமாா், உஷாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com