ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா்க்கும் முகாமில் பயனாளி ஒருவருக்கு புதிய அடையாள அட்டையை வழங்கிய பழனி கோட்டாட்சியா் கிஷான்குமாா்.
திண்டுக்கல்
மாற்றுத் திறனாளிகள் குறைதீா் முகாம்
ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற முகாமுக்கு பழனி கோட்டாட்சியா் கிஷான்குமாா் தலைமை வகித்தாா். முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை, உதவித் தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு 80-க்கும் மேற்பட்டோா் மனு கொடுத்தனா். இதில் உடனடியாக 25 பேருக்கு புதிய மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதில் மாற்றுத் திறனாளிகள் மாவட்ட நல அலுவலா் சுவாமிநாதன், ஒட்டன்சத்திரம் சமூக நலத் துறை வட்டாட்சியா் மங்கலபாண்டியன், மண்டல துணை வட்டாட்சியா் பிரபு சிவசங்கா், வருவாய் ஆய்வாளா் திலகவதி, கிராம நிா்வாக அலுவலா்கள் பாபு, ஹரிகிருஷ்ணன், கிராம உதவியாளா் விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

