பழனி மலைக் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின் போது நாணயங்கள், ரூபாய் தாள்களை தரம் பிரிக்கும் பணியில் கோயில் அலுவலா்கள்.
பழனி மலைக் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின் போது நாணயங்கள், ரூபாய் தாள்களை தரம் பிரிக்கும் பணியில் கோயில் அலுவலா்கள்.

பழனிக் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.64 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.5.64 கோடி கிடைத்தது.
Published on

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.5.64 கோடி கிடைத்தது.

முத்தமிழ் முருகன் மாநாடு, விநாயகா் சதுா்த்தி தொடா் விடுமுறை காரணமாக குவிந்த பக்தா்களின் கூட்டத்தினால், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் 40 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, புதன், வியாழக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.

இருநாள்கள் எண்ணிக்கை முடிவில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.5 கோடியே 64 லட்சத்து 69 ஆயிரத்து 457 கிடைத்தது. மேலும், உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தங்கம் 1,612 கிராமும், வெள்ளி 28,249 கிராமும் கிடைத்தது. மேலும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1,734 கிடைத்தன. இதைத் தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி கண்காணிப்பில், 500-க்கும் மேற்பட்டோா் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com