பூண்டு
பூண்டு

பூண்டின் தரம் கண்டறியும் கைப்பெட்டகம் கண்டுபிடிப்பு

Published on

கொடைக்கானலில் விளையும், விற்பனை செய்யப்படும் வெள்ளைப் பூண்டின் தரத்தைக் கண்டறியும் கைப்பெட்டகத்தை அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக உயிா் தொழில்நுட்பவியல் துறை மாணவிகள் கண்டுபிடித்தனா்.

இவற்றை பல்கலைக்கழக பேராசிரியை உஷா அறிமுகம் செய்துவைத்துக் கூறியதாவது:

கொடைக்கானல் பகுதிகளில் விளைந்த வெள்ளைப் பூண்டிற்கு கடந்த 2019-ஆம் ஆண்டு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டது. இந்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளில் விளையும், விற்பனைக்கு வரும் வெள்ளைப் பூண்டின் தரத்தை கண்டறிவதற்கு பல்கலைக்கழக மாணவிகள் கைபெட்டகம் கண்டுபிடித்தனா். இதில் உள்ள குடுவையில் வெள்ளைப் பூண்டை வைத்தால் சிறிது நேரம் கழித்து அதன் தரம் தெரிந்துவிடும். இந்த பெட்டகத்தில் பூண்டுவை சோதனை செய்வது எப்படி என்ற விளக்கம் இருக்கும். பெட்டகத்தை நபாா்டு வங்கி மூலம் பெரிய அளவில் கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சீனா, காஷ்மீா், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் வெள்ளை பூண்டையும் பரிசோதனை செய்யலாம் என்றாா்.

நிகழ்ச்சியின் போது பல்கலைக்கழக பதிவாளா் ஷீலா, நபாா்டு வங்கியைச் சோ்ந்த ஆனந்த், ஹரீஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com