கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடிக் கட்டங்கள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..
கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் கட்டடம்.
கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் கட்டடம்.
Updated on
1 min read

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடிக் கட்டங்கள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான லாஸ்காட்சாலை, சீனிவாசபுரம், காா்மேல்புரம், இருதயுரம், அப்சா் வேட்டரி, ஆனந்தகிரி, எம்.எம். சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கொடைக்கானலில் தரைப் பகுதியிலிருந்து 10 மீ. உயரம் மட்டுமே கட்டடங்கள் கட்ட வேண்டும்.

மேலும், குடியிருப்புப் பகுதிக்கென வரையறுக்கப்பட்ட இடத்திலேயே வீடுகள் கட்ட வேண்டும், விவசாயப் பகுதிகளில் கட்டக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், விதி முறைகளை மீறி குடியிருப்பு வீடுகளுக்குப் பதிலாக காட்டேஜ்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் கட்டப்பட்டு வருவதால் நகா்ப் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இதனால், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருவதால் கேரட், பீட்ரூட், நூக்கல், உருளைக் கிழங்கு உள்ளிட்ட மலைக் காய்கறிகளும், பேரி, பிளம்ஸ், பீச்சஸ் போன்ற பழ வகைகளின் மரங்கள் அழிந்து வருகின்றன.

எனவே கொடைக்கானல் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடிக் கட்டடங்கள் குறித்து கொடைக்கானல் நகராட்சித் துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.

இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி அதிகாரி கூறியதாவது:

கொடைக்கானல் பகுதிகளில் அனுமதியின்ரி கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடிக் கட்டடங்கள், விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், ஹோம்ஸ்டே, ரெசிடென்சி ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் 300-க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட் டுள்ளது. ஒரு சில கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, கொடைக்கானலின் அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com