கொடைக்கானலில் மழை

Published on

கொடைக்கானலில் புதன்கிழமை தொடா்ந்து மிதமான மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் டித்வா புயல் காரணமாக கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை மாலை வரை தொடா்ந்து மிதமான மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும், மேல்மலைக் கிராமங்களான வெள்ளெகெவி, அடுக்கம், பூண்டி, கூக்கால், கவுஞ்சி ஆகியப் பகுதிகளிலும், கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி,பெரும்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

மேலும், மழையால் கொடைக்கானல்-பெருமாள்மலை செல்லும் மலைச் சாலையில் மரம் விழுந்தது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னா், பொதுமக்கள் மரத்தை வெட்டி அகற்றினா். இதையடுத்து, போக்குவரத்து சீரானது.

X
Dinamani
www.dinamani.com