திண்டுக்கல்
கொடைக்கானல் மலைப் பகுதிக்கு அரசு பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கு பேருந்து சேவைகள் குறைவாக உள்ளன. இதனால், இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கொடைக்கானலுக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனிடையே, பல்வேறு கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த தனியாா் பேருந்துகளும் தற்போது, நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் அத்தியவசிய தேவைகளுக்கு கொடைக்கானலுக்கு வருவதற்கு சிரமப்படுகின்றனா்.
