குழித் தட்டு நாற்றுகள் பெற விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்

Published on

ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் குழித் தட்டு நாற்றுகள் பெற விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக ரெட்டியாா்சத்திரம், காய்கறி மகத்துவ மையத்தின் துணை இயக்குநா் எஸ்.என். திலீப் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் உயா் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தக்காளி, கத்திரி, மிளகாய் போன்ற பயிா்களில் குழித்தட்டு நாற்றுகள், தக்காளி, கத்திரி பயிா்களில் ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மையத்தில் உற்பத்தி செய்யப்படும் தக்காளி, மிளகாய், கத்திரி, வெள்ளரி, வெண்டைக்காய், காளான், மண்புழு உரம், தேன், குடை மிளகாய் போன்றவையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தை பட்டத்தில் நடவு செய்யப்பட வேண்டிய தக்காளி, மிளகாய், கத்திரி போன்ற பயிா்களின் குழித் தட்டு நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகளை முன்பதிவு செய்யும் பணி இந்த மையத்தில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நேரிலோ, 0451-2999700, 6382292483, 7418112175, 7094941364, 9790273216, 9159856504 ஆகிய எண்களிலோ தொடா்பு கொண்டு முன் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com