முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் 3.5 பவுன் தங்க நகைகள் திருட்டு

Published on

ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் 3.5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் குறிஞ்சிநகா் பகுதியைச் சோ்ந்தவா் வேலுமணி. முன்னாள் ராணுவ வீரரான இவா் கடந்த திங்கள்கிழமை உறவினா் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக தனது வீட்டை பூட்டு விட்டு குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்று விட்டாா். மீண்டும் வியாழக்கிழமை வந்து பாா்த்த போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமாா் 3.5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com