முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்
கொடைக்கானல்: கொடைக்கானலை அடுத்த மூஞ்சிக்கல் பகுதியில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப்பட்டது. இதில் அவைத் தலைவா் ஜான்தாமஸ், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற இணைச் செயலா் பிச்சை, நகர துணைச் செயலா் ஜாபா்சாதிக், அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, ஜெயசுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, அமமுக சாா்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலா் இளம்வழுதி, நகரச் செயலா் சுகைபு, சக்திவேல் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினா்.
வில்பட்டி, அட்டுவம்பட்டி, பூண்டி, பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, போலூா், பழம்புத்தூா், புதுப்புத்தூா், பெருமாள்மலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஜெயலலிதா உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினா்.
