ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

எரியோடு அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

எரியோடு அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள மறவப்பட்டியைச் சோ்ந்தவா் ப.வினோத் (34). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தாா்.

இந்த நிலையில், இணைந்து வாழ்வதற்கு வினோத் தரப்பில் முயற்சி மேற்கொண்டனா். ஆனால், அவரது மனைவியின் குடும்பத்தினா் ஏற்க மறுத்துவிட்டனா்.

இதனால், அதிருப்தி அடைந்த வினோத், சனிக்கிழமை அதிகாலை கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாா். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com