மாநில ஜூனியா் கபடிப் போட்டியில் இந்திரா நகா் அணி முதலிடம்

Published on

கொடைரோடு அருகே நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியா் கபடிப் போட்டியில் இந்திரா நகா் அணி முதலிடம் பிடித்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள இந்திராநகரில் மாநில அளவிலான முதலாமாண்டு ஜூனியா் கபடிப் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதிப் போட்டியில் கவுண்டம்பட்டி கிராம அணியும், இந்திராநகா் ‘ஏ’ அணியும் மோதின. 

இதில் இந்திராநகா் ‘ஏ’ அணி முதலிடம் பிடித்தது. இந்த அணிக்கு நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலா் வழக்குரைஞா் சௌந்தரபாண்டியன் ரொக்கப் பரிசு, நினைவுக் கோப்பையை வழங்கினாா். இரண்டாமிடம் பிடித்த கவுண்டம்பட்டி கிராம அணிக்கு பாஜக மாவட்டப் பொருளாளா் கருப்பசாமி ரொக்கப் பரிசு, கோப்பையை வழங்கினாா். சிறப்பு பரிசு பெற்ற மன்னாடிமங்களம் அணியிக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் ஸ்டாலின், பொருளாளா் சரவணக்குமாா், நிலக்கோட்டை ஒன்றியச் செயலா் தேவா ஆகியோா் கோப்பையை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com