வீரதுா்க்கையம்மன் கோயில் குடமுழுக்கு! திரளானோா் தரிசனம்!

Published on

பழனி வீரதுா்க்கையம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயில் குடமுழுக்கையொட்டி, வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. சனிக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, காலை 11 மணிக்கு மேல் குடமுழுக்கு நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை தலைமை குருக்கள் அமிா்தலிங்கம் தலைமையில் சிவாசாரியா்கள் செய்தனா்.

இதில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, அதிகாரிகள், அலுவலா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். இது கடந்த 35 மாதங்களில் பழனி கோயில் சாா்பில் நடைபெறும் 16-ஆவது குடமுழுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com