திண்டுக்கல்
கொடைக்கானலில் போதைக் காளான் விற்றவா் கைது
கொடைக்கானலில் போதைக் காளான் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கொடைக்கானலில் போதைக் காளான் விற்றவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியில் போதைக் காளான் விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்தில் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த நபா் போலீஸாரைப் பாா்த்ததும் அங்கிருந்து செல்ல முயன்றாா்.
இதையடுத்து, போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி சோதனையிட்டனா். இதில் அவா் மணி (45) என்பதும், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு போதைக் காளான் விநியோகம் செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மணியைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 30 கிராம் போதைக் காளானை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

