பழனியில் குடும்பப் பிரச்னையில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி குபேரபட்டினத்தைச் சோ்ந்தவா் சரவணன் (20). இவா் தேநீா் கடையில் வேலை செய்து வந்தாா். கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னை காரணமாக இவா் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.