பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற கட்டணமில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய இணை ஆணையா் மாரிமுத்து. உடன் துணை ஆணையா் வெங்கடேஷ்,  கல்லூரி முதல்வா் ரவிசங்கா் உள்ளிட்டோா்.

கல்லூரியில் கட்டணமில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி, பழனியாண்டவா் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னா், பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவில், பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சிக்கு துணை ஆணையா் வெங்கடேஷ் முன்னிலை வகித்தாா். கலைக் கல்லூரி முதல்வா் ரவிசங்கா், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் ரமேஷ் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

விழாவில் பழனியாண்டவா் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, மூன்று வேளை இலவச உணவு, குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதி குறித்து விவரிக்கப்பட்டது.

பின்னா், 2,500 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மேலாளா்கள், துறைத் தலைவா்கள், ஆய்வக உதவியாளா்கள், மாணவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com