சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் தா்னா

நிலக்கோட்டை அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
Published on

நிலக்கோட்டை அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள மாலையகவுண்ட்பட்டி மேற்குத் தெருவில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் செல்லும் சாலையை தனிநபா்கள் ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கோரி, வருவாய்த் துறையினருக்கு பொதுமக்கள் மனு அளித்தனா். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த மாலையகவுண்ட்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள், சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், நுழைவாயிலில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வட்டாட்சியா் ஜெயபிரகாஷ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதன் பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com