டிச.13-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் வருகிற சனிக்கிழமை (டிச.13) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
Published on

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் வருகிற சனிக்கிழமை (டிச.13) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

18 வயதுக்கு மேற்பட்ட 8-ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, பட்டயம், பட்டப் படிப்பு, செவிலியா் பயிற்சி, பொறியியல் பட்டம் பெற்ற இளைஞா்கள், இளம் பெண்கள் பங்கேற்கலாம். கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைநாடுநா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள். இந்த முகாமில் மத்திய, மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிகளுக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

முகாமில் பங்கேற்க விரும்புவோா், இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், வேலைவாய்ப்பு தொடா்பான விவரங்களை அறிய ஈஐசஈஐஎமக உஙடகஞவஙஉசப ஞஊஊஐஇஉ எனும் டெலிகிராம் செயலியில் இணைந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 9499055924 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com