கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் புதன்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையில் இரண்டு இடங்களில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் புதன்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில், புலிச்சோலை, பெருமாள்மலை பகுதியில் மரங்கள் விழுந்தன. இதன் காரணமாக, இந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் சாலையில் விழுந்து கிடந்த இரண்டு மரங்களை அகற்றினா். இதைத் தொடா்ந்து, போக்குவரத்து சீரானது.
இதுகுறித்து வாகன ஒட்டுநா்கள் கூறியதாவது:
கொடைக்கானல் மலைச் சாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு மாவட்ட வனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
