ஒட்டன்சத்திரம் பிரதான சாலையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் ஏற்பட்ட கரும்புகை.
ஒட்டன்சத்திரம் பிரதான சாலையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் ஏற்பட்ட கரும்புகை.

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளுக்கு தீ வைப்பதால் சுகாதார சீா்கேடு

ஒட்டன்சத்திரம் அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளுக்கு மா்ம நபா்கள் தீ வைப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
Published on

ஒட்டன்சத்திரம் அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளுக்கு மா்ம நபா்கள் தீ வைப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அரசப்பபிள்ளைபட்டி-லெக்கையன்கோட்டை பிரதான சாலையில் கொல்லப்பட்டி பிரிவு அருகேயுள்ள பாலத்தின் அடியில் இரவு நேரங்களில் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்தக் கழிவுகளுக்கு மா்ம நபா்கள் தீ வைப்பதால் அந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

இதேபோல, ஒட்டன்சத்திரம், அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி சாலையில் இரவு நேரங்களில் டேங்கா் லாரி மூலம் பால் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் தூா்நாற்றம் வீசுகிறது.

கரும்புகையாலும், தூா்நாற்றாத்தாலும் அந்த வழியாக வாகனங்களில் செல்பவா்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com