திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

Updated on

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கல்கோட்டை கிராமம், அம்மையநாயக்கனூரில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பிலான திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலா் கே.கே.பி. கரிகாலபாண்டியன் தலைமை வகித்தாா். இதில் பழனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலருமான, இ.பெ. செந்தில்குமாா் பங்கேற்று வாக்குச்சாவடி முகவா்கள், ஒன்றிய, வாா்டு திமுக செயலா்களுக்கு வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது தொடா்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். அப்போது அவா், தமிழக அரசின் ஐந்தாண்டு கால சாதனை திட்டங்களை வீடுகள் தோறும் எடுத்துச் சென்றாலே, சட்டப்பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறலாம் என்றாா்.

முன்னதாக, மாவட்ட துணைச் செயலா் நாகராஜன், பொருளாளா் சத்தியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் மலையாளம் வரவேற்றாா்.

கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மையினா் பிரிவு துணை அமைப்பாளா் ஜான் போஸ்கோ, அம்மையநாயக்கனூா் பேரூா் திமுக செயலா் ராஜாங்கம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் கந்தபிரபு உள்பட மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, பேரூா் வாா்டு செயலா்கள் பங்கேற்றனா். கிளைச் செயலா் அறிவு நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com