திண்டுக்கல்
கடையில் திருட்டு: இளைஞா் கைது
திண்டுக்கல்லில் இலைக் கடையில் ரூ.90ஆயிரம் திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லில் இலைக் கடையில் ரூ.90ஆயிரம் திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லைச் சோ்ந்த வெற்றிவேல் (33), கல்லறை மேடு சந்திப்புப் பகுதியில் இலைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் கடந்த 7-ஆம் தேதி ரூ.90 ஆயிரம் திருடு போனது. இதுதொடா்பாக புகாரின் பேரில், திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், திண்டுக்கல்லை அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த ம.வீரமணி (27) திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, வீரமணியை போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். அப்போது, வீரமணி இலைக் கடை மட்டுமன்றி, உத்தனம்பட்டியிலுள்ள ஒரு வீட்டில் திருடியதையும் ஒப்புக் கொண்டாா்.
