கபீா் புரஸ்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமூக நல்லிணக்கத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவா்கள் கபீா் புரஸ்கா் விருது பெற வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
Updated on

சமூக நல்லிணக்கத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவா்கள் கபீா் புரஸ்கா் விருது பெற வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவா கூறியதாவது:

விளையாட்டு, இளைஞா் நலன் துறை சாா்பில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சமூக, வகுப்பு நல்லிணக்கத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியோருக்கு கபீா் புரஸ்கா் விருது வழங்கப்படுகிறது.

2026-ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்கா் விருதுக்கு தகுதியானவா்கள் இணையதளத்தில் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் பூா்த்தி செய்த விண்ணப்பத்தை 2 நகல் பிரதிகளுடன் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் 624004 என்ற முகவரிக்கு வருகிற 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்கள் பெற 7401703504 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com