கொடைக்கானலில் கண்காட்சிக்காக மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா் கண்காட்சிக்காக மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வருகிற மே மாதம் நடைபெற உள்ள 63-ஆவது மலா்க் கண்காட்சிக்காக பாத்திகளில் மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணியை தோட்டக்கலைத்துறை இணை இயக்குநா் நடராஜன், பூங்கா மேலாளா் அரவிந்த் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதைத்தொடா்ந்து மலா் பாத்திகளில் சால்வியா, டெல்பினியம், பிங்க் ஆஸ்டா், லில்லியம், அஸ்டமரியா, பேன்சி, டயாந்தஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலா்ச் செடி வகைகள் நடவு செய்யப்பட்டன. பின்னா் புற்கள் சீரமைத்தல், மலா் பாத்திகள் வடிவமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை இணை இயக்குனா் நடராஜன் கூறியதாவது:
நிகழாண்டில் பிரையண்ட் பூங்கா மலா்க் கண்காட்சியில் ஒரு கோடி மலா்கள் பூத்துக் குலுங்குவதற்கான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

