கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் கூடிய பனிப் பொழிவு.
கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் கூடிய பனிப் பொழிவு.

கொடைக்கானலில் பனிப் பொழிவு

கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் கூடிய பனிப் பொழிவு.
Published on

கொடைக்கானலில் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதால் குளிரின் தாக்கம் அதிகரித்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுவாக நவம்பா்,டிசம்பா் மாதங்களில் பனிப் பொழிவு காலம். ஆனால் நிகழாண்டில் நவம்பா், டிசம்பா் மாதங்களில் அவ்வப்போது மழை பெய்ததால் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களா மழையில்லாததால், பகல் நேரங்களில் நல்ல வெயிலும் மாலை, இரவு நேரங்களில் பனிப் பொழிவும் நிலவி வருகிறது. இதனால், குளிா் அதிகரித்துள்ளதால், இரவு 7 மணிக்கு மேல் வெளியிடங்களில் பொது மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. மேலும் செடிகள், புல்வெளிகளில் பனித் துளிகள் அதிகமாக தேங்கியது.

X
Dinamani
www.dinamani.com