தாண்டிக்குடி கோயில் அலுவலகத்தை சேதப்படுத்திய காட்டு யானை

தாண்டிக்குடி கோயில் அலுவலகத்தை சேதப்படுத்திய காட்டு யானை

தாண்டிக்குடி பாலமுருகன் கோயில் வளாகத்தில் காட்டு யானையால் சேதப்படுத்தப்பட்ட சமையல் கூடம்.
Published on

கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி பாலமுருகன் கோயில் வளாகத்தில் அலுவலகம், சமையல் கூடத்தை காட்டு யானை சேதப்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடியில் பாலமுருகன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு நாள்தோறும் பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனா். இந்தக் கோயில் வளாகத்தில் அலுவலகம், வீடு, அன்னதானக் கூடம் ஆகியன உள்ளன.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை இங்கு வந்த காட்டு யானை கோயில் வளாகத்திலுள்ள அலுவலகம், அன்னதான மண்டபத்திலுள்ள கதவுகள் சமையல் கூடம் ஆகியவற்றை சேதப்படுத்தியது.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் கூறியதாவது:

இந்தப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதிகாலை நேரத்தில் கோயில் பகுதியில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இதே நிலை நீடித்தால் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோயிலுக்கு வருவதற்கே தயங்குவா். எனவே, வனத்துறையினா் காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com