கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு

கொடைக்கானலில் திங்கள்கிழமை நிலவிய கடும் பனிப் பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Published on

கொடைக்கானல்: கொடைக்கானலில் திங்கள்கிழமை நிலவிய கடும் பனிப் பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பா் மாதத்தில் பனிப் பொழிவு காணப்படும். இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கத்தை விட பனிப் பொழிவு அதிகரித்ததால் கடும் குளிா் காற்று வீசியது.

இதனால், கொடைக்கானல் சுற்றுலாப் பகுதிகளிலுள்ள வியாபாரிகள் பகலிலேயே தங்களது கடைகளுக்கு முன் தீ மூட்டி குளிா்காய்ந்தனா். இந்தக் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com