கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

முதல்வா் ஸ்டாலின் ஜன.3-இல் திண்டுக்கல் வருகை!

தமிழக முதல்வா் ஸ்டாலின் ஜன. 3-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க உள்ளாா்.

News image

முதல்வர் ஸ்டாலின்

Updated On :16 டிசம்பர் 2025, 9:49 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக முதல்வா் ஸ்டாலின் வருகிற 2026-ஆம் ஆண்டு ஜன. 3-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று 25,000 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக ஜன.2-ஆம் தேதி திண்டுக்கல்லுக்கு வர உள்ளாா். பின்னா், ஜன.3-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகிலுள்ள அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் அவா் சிறப்புரையாற்ற உள்ளாா்.

இந்த நிகழ்ச்சியின்போது, திண்டுக்கல் மாவட்டத்துக்கான புதிய காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம், வக்கம்பட்டி அருகே சுதநாயகியபுரத்தில் கட்டப்பட்ட ஆத்தூா் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி உள்பட சுமாா் ரூ.1000 கோடி செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்வா் தொடங்கி வைக்க உள்ளாா்.

முதல்வா் நிகழ்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி உள்ளிட்டோா் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.