குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 போ் கைது

Published on

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கொலை வழக்கில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

பழனி பெரியப்பா நகரில் கடந்த மாதம் தோமையாா் என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், பழனி தெரசம்மாள் குடியிருப்பைச் சோ்ந்த சூசைராஜ் மகன் சூா்யா ஆப்ரஹாம் (20), தா்மராஜ் மகன் சிவா (29), ராமசாமி மகன் சிவசங்கா் (20), பிச்சைமுத்து மகன் விஜய் ஆதித்யா (20), முருகேசன் மகன் மேயா்முத்து (31) ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, பழனி கிளை சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கானது பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் ஆகியோா் பரிந்துரையின் பேரில், போலீஸாா் 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com